2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘அடிப்படையான வசதிகள் கூட வழங்கவில்லை’

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

சகல உதவிகளும் செய்து தரப்படுமென கூறப்பட்டபோதும், அடிப்படையான வீட்டு வசதிக்கூட இதுவரை வழங்கப்படவில்லையென, இந்தியாவிலிருந்து தயாகம் திரும்பி முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் குடியேறியுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு, அம்பாள்புரம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவின் தமிழக்தில் தங்கியிருந்து, தற்போது தமது சொந்த இடத்தில் மீள்குடியேறியுள்ள, 2 அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு இதுரையல், வீட்டுத்திட்டம் எதுவும் வழங்கப்படவில்லையெனவும், தாங்களாகவே அமைக்கப்பட்ட தற்காலிக வீடு ஒன்றிலேயே வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்த அவர்கள், இந்தியாவிலிருந்து தாயகம் திரும்புபவர்களுக்கு வீட்டுத்திட்டம், உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தபோதும், தங்களுக்கு இதுவரை வீட்டுத்திட்டமோ அல்லது ஏனைய உதவிகளோ இதுவரை கிடைக்கவில்லையென அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X