2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

‘அடுத்தாண்டில் நந்திக்கடல் துப்புரவு பணிகள்’

Editorial   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

நந்திக்கடலைத் துப்புரவு செய்யும் பணிகள், அடுத்தாண்டின் நடுப்பகுதியில் முன்னெடுக்கப்படுமென, முல்லைத்தீவ மாவட்டச் செயலாளர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று (16) நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பொதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நந்திக்கடலைத் துப்புரவு செய்வது தொடர்பில், தொர்ந்தும் உரிய தரப்புகளுக்கு அறிவித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அடுத்தாண்டின் நடுப்பகுதி வரை நீர் உயர்ந்து காணப்படுவதால், நந்திக்கடலைத் துப்புரவு செய்ய முடியாதென்றும் ஜூன் மாதமளவில் அதற்கான நிதியைப்பெற்று புனரமைப்பதாகவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .