2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’அதிகாரங்களை வழங்கியிருந்தால் அபிவிருத்தியடைந்திருப்போம்’

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தமிழீ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட அதிகாரங்களை, இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்கு  இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தால்,  இன்று வடக்கு - கிழக்கு அபிவிருத்தியடைந்த பிரதேசமாக மிளிர்ந்திருக்குமென, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

வரணி - இடைக்குறிச்சி  பகுதியில், நேற்று (07), பனை சார் உற்பத்திப் பொருள்களுக்கான சேவை நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தாங்கள் ஒரு நிலையான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால், ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டுமெவும் ஆனால் தற்போது தமது இனத்தினுடைய ஒற்றுமையை சிதைப்பதற்காக பல்வேறுபட்ட தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆகவே, அனைவரும் அவதானமாக இருந்து, தமது இனத்தின் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, நிலையான அரசியல் தீர்வை எய்துவதற்காக ஓரணியில் பயணிக்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .