2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அதிபர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Editorial   / 2018 மே 02 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

- க.அகரன்

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இன்று (02) காலை அதிபர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மிகை நிரப்பு அதிபர்கள் மற்றும் கடமை நிறைவேற்று அதிபர்களே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து மிகை நிரப்பு அதிபர்களாக கடமையாற்றிவரும் தம்மை நிரந்தர நியமனத்துள் உள்வாங்காத நிலையில், அதிபர்களுக்கான கொடுப்பனவுகள் பதவி உயர்வுகள், இடமாற்றங்களை கோர முடியாத நிலையில் தாம் உள்ளதாக தெரிவித்த அதிபர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்க ஆவண செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் இவ்வாறு அதிபர்களாக பணியாற்றியவர்கள் நிரந்தர நியமனங்களுக்கு உள்வாங்கப்பட்டதாக தெரிவித்த அதிபர்கள், தாமும் அவ்வாறு உள்வாங்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே தமக்கான நிரந்தர நியமனங்களை வழங்க ஆவண செய்ய வேண்டும் என கோரி கவனயீப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X