Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 07 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“கிளிநொச்சி - பளைப் பிரதேசத்தில் கழிவுகள் கொட்டப்படுகின்ற பகுதியில், சுற்றுமதில்கள் அமைப்பதுக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருக்கின்றோம். அதற்கான அனுமதிகள் கிடைக்கின்றபோது, அதனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர் எஸ். அனுஷியா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில், பிரதேச சபையால் சேகரிக்கப்படும் கழிவுகள் கொட்டப்படும் இடம் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும், இதனால் பலரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், இப்பகுதியில் கொட்டப்படும் கழிவுகளை உட்கொண்டு, கால்நடைகள் சில உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுகள், உரிய முறையில் அழிக்கப்பட வேண்டும் என, பல்வேறு தரப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில், பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.அனுஷியாவை தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “கழிவகற்றலுக்கென, அல்லிப்பளைப் பிரதேசத்தில் ஒதுக்கப்பட்ட அரச காணிப் பகுதியிலேயே, கழிவுகள் கொட்டப்படுகின்றன. இப்பகுதிக்கு அண்மையாகக் குடியிருப்புகள் எவையும் தற்போது இல்லை. இதற்கு, பாதுகாப்பு மதில்களை அமைக்க முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருக்கின்றோம். அதற்கான அனுமதிகள் கிடைக்கும் பட்சத்தில், மதில்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
26 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
4 hours ago