2025 ஜூலை 05, சனிக்கிழமை

அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் ஆளணி பற்றாக்குறை

Menaka Mookandi   / 2016 ஜூலை 04 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சிமன்றத் திணைக்களத்தினூடான அபிவிருத்தி வேலைத்திட்டங்;களை முன்னெடுப்பதற்கு ஆளணி பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக உள்ளதென அத்திணைக்களம் தெரிவிக்கின்றது.  

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச சபைகளின் கீழுள்ள பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்;டு வருகின்ற போதிலும், அவற்றை உரிய முறையில் உரிய காலங்களில்  முன்னெடுப்பதற்குரிய தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறைகள் என்பன பெரும் பிரச்சினையாக உள்ளதெனவும் திணைக்களம் கூறியது.

அதாவது மூன்று பிரதேச சபைகளிலும் பத்துக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இல்லாத நிலை காணப்படுவதுடன், தரம் 1 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. தரம் 3 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மூன்று பேர் மாத்திரமுள்ளதால், இத்தரத்தில் உள்ளவர்கள் ஆறு மில்லியன் ரூபாவுக்கு உட்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு மாத்திரம் அனுமதிகளை வழங்க முடியும். இத்தொகைக்கு மேலான எந்த வேலைத்திட்டங்களுக்கும் அனுமதிகளை வழங்கமுடியாது.

இவ்வாறான நிலை காணப்படுகின்ற போது, மக்களுக்கான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கப்படுவதில்லை என திணைக்களத்தின் மீது பொதுமக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் எனவும் திணைக்களம் தேலும் கூறுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .