Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவிடம் முன் வைத்துள்ளார்.
கிளிநொச்சி – பூநகரியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதியுதவிடன் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த திட்டத்தினை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலணி ஆரம்பித்து நெறிப்படுத்தி வருகின்றது.
விஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்து பேசுகையில், 'முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, வடக்குக்கான பலத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த அரசாங்கத்தின் போது பல்வேறு நெருக்கடிகளை வடக்கு மாகாணம் எதிர் கொண்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மக்கள் பல்வேறு திட்டங்களை அனுபவிக்க முடிகின்றது.
வடக்கில் பல பாடசாலைகள் இன்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளன. தரையில் இருந்து கல்வி பயில வேண்டிய நிலையை நான் நேரில் சென்று பார்த்தேன். இந்நிலையில் வடக்கிற்காக அதிகளவான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago