Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
தங்களை அபிவிருத்தி செய்வதற்கு, தங்களிடம் நிதி வசதிகள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிநாடுகள் வரும்போது நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யார் வந்தாலும் தாங்கள் அவர்களை வரவேற்போம் என்றும் கூறினார்.
கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் கீழுள்ள விவசாயிகளின் பிரச்சினை மற்றும் பல்வேறுபட்ட மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் முகமாக, இன்று (28), கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, உழவர் சந்தை அவசியம் தேவை என்பதனை, விவசாயிகள் வலியுறுத்தி இருந்தார்கள் எனத் தெரிவித்த டக்ளஸ், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறினார்.
கௌதாரிமுனை பிரதேசத்தில், இந்திய நிறுவனம் ஒன்றுக்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்குரிய காணி வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, அதவற்கு பதிலளித்த அமைச்சர், யாருக்கும் அவ்வாறு எந்தக் காணிகளும் வழங்கப்படவில்லை என்றார்.
'எங்களை அபிவிருத்தி செய்வதற்கு நிதி வசதிகள் இல்லை. வெளிநாடுகள் வரும்போது நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் யார் வந்தாலும் அதனை நாங்கள் வரவேற்போம்' என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago