2025 ஜூலை 23, புதன்கிழமை

‘அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாஸ்கரன்

கிளிநொச்சி - பூநகரிப் பிரதேசத்தில், கடற்றொழிலை விருத்தி செய்யும் வகையிலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை தரம் உயர்த்தும் வகையிலும் உரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்குமாறு, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள நல்லூர், ஞானிமடம், கௌதாரி முனை, பள்ளிக்குடா, பொன்னாவெளி, கரியாலை நாகபடுவான், நாச்சிக்குடா, முழங்காவில் ஆகிய பகுதிகளில், சுமார் 2,005 வரையான மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், குறித்த கரையோரப் பகுதிகளில் இறங்குதுறைகள் இன்மை, மீனவர் ஓய்வு மண்டபங்கள் இன்மை, கருவாடு பதனிடும் தளங்கள் இன்மை போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. 

அத்துடன், கடற்றொழிலுக்குச் செல்கின்ற வீதிகளும் பயணிக்கமுடியாத நிலையில் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .