Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, துணுக்காய் அம்பலப்பெருமாள் குள கிராமத்துக்குச் செல்லும் வீதி பற்றைகள் மூடிக்காணப்படுவதுடன், மின்சாரம், மருத்துவம் மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இக்கிராமம் உள்ளது.
1968ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இக்கிராமத்தில் தற்போது 110 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் 2009இல் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வீதி புனரமைக்கப்படாததன் காரணமாக போக்குவரத்து செய்வதில் மக்கள் பல இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் யானைகளின் தொல்லை அதிகமாகவுள்ள கிராமங்களில் ஒன்றாகிய அம்பலப்பெருமாள்குளக் கிராமத்தில் வீதிக்கருகில் பற்றைகள் வளர்ந்திருப்பதுடன் யானைகளின் தாக்குதல் அச்சம் காரணமாக மாலை வேளைகளில் மக்கள் பயணிப்பதில் அச்சங்கொண்டுள்ளனர்.
தங்களுடைய கிராமங்களின் வீதிகளை புனரமைத்து மின்சாரம், மருத்துவம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை உருவாக்கும்படி இக்கிராம மக்கள், துணுக்காய் பிரதேச செயலர், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ஆகியோருக்கு பல மனுக்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Jul 2025