2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

அரசாங்க அதிபரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டனர் பெண்கள்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 ஜூலை 04 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் வீட்டுத் திட்ட பயனாளிகள் தெரிவில், அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, மன்னார் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த, பாதிக்கப்பட்ட நான்கு குடும்பப் பெண்கள், மன்னார் பிரதேச செயலகத்துக்கு முன்,நேற்று (3) காலை ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (4) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த நிலையில், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெலின் கோரிக்கைக்கு அமைவாக, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றுள்ளனர்.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல், சம்பவ இடத்துக்கு வந்து, மன்னார் பிரதேச செயலாளர் எஸ்.பரமதாசன், காணி அதிகாரி ஆகியோரை அழைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் கலந்துரையாடினர். இதன்போது, போராட்டத்தை மேற்கொண்ட நான்கு பெண்களுக்கும் ஏன்? எதற்காக வீட்டுத் திட்டம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தை தனித்தனியாக தெளிவுபடுத்தப்பட்டது.

தொடர்ந்து, உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, உரிய முறையில் வீட்டுத் திட்டம் வழங்கப்படும் என மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.

இந்நிலையில், தமக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்படாமைக்கான காரணத்தை, மன்னார் பிரதேச செயலாளர், வீட்டுத் திட்டத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள், உரிய முறையில் தமக்குத் தெரியப்படுத்தாது, நாளாந்தம் தங்களை அலைய விட்டதாகவும்,தற்போது வரை மன்னார் பிரதேச செயலாளர், உயர் அதிகாரி என்ற அகங்காரத்துடன் செயற்படவதாகவும்,மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க முனையாது அசமந்த போக்குடன் தன்னிச்சையாக செயற்பட்டமையினாலேயே தாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அந்த பெண்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெலின் கோரிக்கைக்கு அமைவாக, அந்தப் பெண்கள், தமது போராட்டத்தைக் கைவிட்டதோடு, தமக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .