2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கும்

Editorial   / 2020 பெப்ரவரி 02 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

தேர்தல் காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் தான் நன்மை கிடைக்குமென, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் ச.கனகரத்தினம் தெரிவித்தார்.

முள்ளியவளையில், நேற்று (01) நடைபெற்ற “கமட்ட கெயக் - ரட்டட்ட ஹெட்டக்”  வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,  தமிழர்கள் யாருடன் சேர்ந்து நின்றால் நன்மைகளைப் பெறலாம், தேவைகளைப் பூர்த்தி செய்யலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமெனவும் மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து நல்லவாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.

இனிவரப்போகும் தேர்தல் காலங்களில், இந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால், தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்குமென்றும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .