Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
சங்குப்பிட்டி, அறுகுவெளி பிரதேசத்தில் உப்பளம் ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
பயனாளிகளுக்கான உள்ளீடு விநியோக நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (23) காலை 10 மணியளவில் கிளிநொச்சி பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
யுத்தத்துக்குப் பின்னர் வடபகுதியில், தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டு பன்னாட்டு கம்பனிகள் தொழில் செய்ய விரும்புகின்றன. அவர்கள் எம்மை நாடும்போது முதலாவதாக சொல்வது நாங்கள் 400 பேருக்கு வேலை வழங்குவதாகவும், 5,000 பேர் வரை மறைமுகமாக தொழில் வாய்ப்பு இருக்கும் என குறிப்பிடுகின்றனர்.
உங்களுக்காகவே இந்த பகுதிக்கு வருவதாக கூறுகின்றனர். ஒருவரும் இங்கு வந்து தாம் உழைத்து கொள்ள வருவதாக குறிப்பிடுவதில்லை. வேலைவாய்ப்பை காட்டியே அவர்கள் எம்மிடம் வந்து அனுமதி கேட்கின்றனர். இந்த விடயத்தில் நாங்கள் அவதானம் செலுத்த வேண்டும். வெறுமனே வேலைவாய்ப்புக்காக எதிர்கால எமது சமூகம் வாழ வேண்டிய பகுதிகள் மற்றும் சூழல் தொடர்பில் அக்கறை செலுத்தாமல் இருக்க முடியாது என்றார்.
புத்தளம் மாவட்டத்தில் அங்கிருக்க கூடிய கடல் நீர் ஏரிகளை அண்டி ஏராளமான இறால் வளர்ப்பு பண்ணைகள் உருவாக்கப்பட்டன. அப்போது, மேற்கூறியவாறு ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு, பெருமளவான நிதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இன்று குறித்த பிரதேசத்தில் இறால் வளர்ப்பதற்கான எந்த சூழ்நிலையும் இல்லை. கடல் நீரில் இறால் வளரும். குறித்த கடல் நீரை உள்ளே எடுத்து வந்து அதில் இரசாயனங்களை செலுத்தியமையால் தற்போது இறாலும் வளராமல் வேறு எந்த வேலையையும் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
ஒரு பிரதேசத்தில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படும் போது அப்பகுதியின் சூழல் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago