Niroshini / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - அறிவியல்நகர் காட்டுப்பகுதியில் இருந்து, நேற்று (22), விசேட அதிரடி படையினரால், ஒருதொகுதி வெடிபொருள்கள் மீட்னக்கட்டுள்ளன.
இதன்போது, பயன்படுத்த முடியாத நிலையிலான டி-56 ரக துப்பாக்கிகள் - 5, ரவைகள் - 30, ரவைக் கூடு - 1 என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் புதைத்த வைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த இந்த வெடிபொருள்கள், அண்மையில் பெய்த மழை காரணமாக, அவை வெளியே தென்பட்டுள்ளன.
இது தொடர்பில், விசேட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த விசேட அதிரடிப் படையினர், அவற்றை மீட்டுள்ளனர்.
இந்தப் பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் சூட்டு பயிற்சி இடம்பெற்ற பகுதி என்பதால், அவை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025