சண்முகம் தவசீலன் / 2018 மார்ச் 26 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்துக்கு வழங்க வேண்டாம் எனவும் அதனை மீட்டு இம்முறை மாவீரர் நாளுக்கு விளக்கேற்ற ஏற்பாடு செய்து தருமாறு கோரி 600 க்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டு மாவட்ட செயலரிடம் மகஜர் ஒன்றை இன்று (26) கையளித்துள்ளனர்.

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்தினருக்கு சுவீகரிப்பதுக்காக கிராம அலுவலர் ஊடாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த காணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகளை நிறுத்துமாறு கோரியும், எமது உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்த குறித்த காணியை மீட்டுத்தர வேண்டும் எனவும் 600 க்கும் மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்டு மாவட்டச் செயலருக்கு மகஜரைக் கையளித்துள்ளனர்.
இதுதொடர்பில் உரியவர்களுக்கு தெரியப்படுத்துவதாக இதன்போது மாவட்டச் செயலர் தெரிவித்தார்.
18 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
37 minute ago