2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஆசிரியையுடன் தவறான உறவு: ஆசிரியருக்கு இடமாற்றம்

George   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் பிரபலமான பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கற்பிக்கும் இன்னொரு ஆசிரியையுடன் தகாத உறவு வைத்தமையால், வலயக் கல்விப் பணிமனையால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பாடசாலையில் நவராத்திரி நிகழ்வுக்காக, முதல் நாள் இரவு அலங்கரிப்பு வேலைகள் இடம்பெற்றுள்ளன. உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலர், தோரணம் கட்டுவதற்கான குருத்தோலை வெட்டுவதற்கு பக்கத்து வளவுக்குச் சென்றுள்ளனர்.

அப்பகுதியில், பாழடைந்த நிலையில் இருக்கும் வீடொன்றில் இருந்து அநாமதேய சத்தம் ஒன்று கேட்டதை உணர்ந்த மாணவர்கள், அங்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். இதன்போது, தமது பாடசாலையின் ஆசிரியரும், ஆசிரியையும் தவறாக நடப்பதை அவதானித்துள்ளனர்.

இதனை மாணவர்கள், தங்கள் அலைபேசியில் பதிவுசெய்து, விடயத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் வரையில் கொண்டு சென்றனர். இதனையடுத்து, ஆசிரியர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த வலயக் கல்விப் பணிமனை, அவரை இடமாற்றம் செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .