2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆசிரியரின் இடமாற்றத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு

George   / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட, உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாசடாலையில் கல்வி கற்பிக்கும் ஆரம்பப் பிரிவு (தரம் 5) ஆசிரியரை இடமாற்றம் செய்வதற்கு, மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து பாடசாலைக்கு முன்பாக ஆர்;ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை (04) ஈடுபட்டனர்.

எனினும், அந்த ஆசிரியரை இடமாற்றம் செய்வத தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக வலயக் கல்விப் பணிப்பாளர் கூறியதையடுத்து, ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

மேற்படி ஆசிரியரை வலயக் கல்விப் பணிமனைக்கு இடமாற்றம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும், திறமையான அந்த ஆசிரியர் தொடர்ந்து அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்க வேண்டும் எனக்கோரியும், ஏற்கெனவே அந்தப் பாடசாலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறையுள்ள நிலையில் இந்த இடமாற்றம் செய்யப்படக்கூடாது எனக்கூறி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .