Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஜனவரி 11 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் அரச பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தை நடத்தி வருகின்ற வர்த்தகர் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவாதாக, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், மன்னார் புதிய பஸ் தரிப்பிட பகுதியில், ஜனவரி 6ஆம் திகதின்று, 200 நபர்களுக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போத, இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதென்றார்.
தொற்றுக்கு உள்ளானவர்களில் ஒருவர், இலங்கைப் போக்குவரத்து சபையின் புத்தளம் சாலையைச் சேர்ந்த நடத்துனர் எனவும், இவர் நிக்கராவெட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவர், மன்னார் - புத்தளத்துக்கிடையில் சேவையில் ஈடுபடும் பஸ்ஸில் பணியாற்றியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது என, மாவட்டச் செயலாளர் கூறினார்.
மற்றைய நபர், கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், இவர், மன்னார் அரச பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தை நடத்தி வருபவர் எனவும் கூறினார்.
ஆடை விற்பனை நிலையத்தை நடத்தி வருகின்ற குறித்த நபர், மன்னார் - உப்புக்குளம் பகுதியில் வசித்து வந்ததால், அவருடன் தொடர்பை பேணிய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை, சுகாதார துறையினர் முன்னெடுத்து வருகின்றனர் எனவும், ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
எனவே, குறித்த ஆடை விற்பனை நிலையத்துக்குச் சென்று, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறும், அவர் அறிவுறுத்தினார்.
9 minute ago
13 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
52 minute ago
1 hours ago