2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆண்டாங்குளத்தில் குடியேற தடையில்லை

George   / 2016 ஜூலை 21 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

'முல்லைத்தீவு கரைதுறைபற்றின் ஆண்டாங்குளத்தில் மக்கள் குடியேறுவதற்கு எந்தவித தடைகளும் இடையூறுகளும் இல்லை' என்று கரைதுறைபற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன், நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விரிவாக கூறுகையில், 'இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த இந்தப் பகுதியைச் சேர்ந்த 13 குடும்பங்கள் தற்போது, முள்ளியவளை, தண்ணீரூற்றுப் பகுதியில் சகல அடிப்படை வசதிகளையும் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்குச் சொந்தமான ஆண்டாங்குள விவசாய மற்றும் குடியிருப்பு காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, தற்போது வெறுமையாகவுள்ளன. இதனால் அந்தப் பகுதி மக்கள், தங்கள் காணிகளை பார்வையிட மற்றும் பராமரிப்பதற்கு எந்தவிதமான இடையூறுகளுமில்லை' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .