2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

ஆணழகன் போட்டியில் சாதனை படைத்த மன்னார் வீரர்கள்

Editorial   / 2023 ஏப்ரல் 07 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 74 வது  ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4ம் இடங்களை பெற்ற மன்னார் மாவட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (7) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது 3 ஆம் இடத்தை பெற்ற ஜெஸ்லின் மற்றும் 4 ஆம் இடத்தைப் பெற்ற ஜான்சன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் மற்றும் மாவட்ட செயலக பணியாளர்களும் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .