Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 30 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
“2 கோடி நிதியானது, வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவு அளிக்கவே வழங்கப்பட்டுள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா மன்னகுளத்தில் நேற்று (29) மாலை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நொதேன் பவர் மின்நிலையத்தின் செயற்பாட்டின் காரணமாக, நிலத்தடி நீரில் ஒயில் கலந்துள்ளதை அனைவரும் அறிவார்கள். தற்போது அந்த நீரை குடிப்பதற்கோ விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியாது உள்ளது. இந்நிலைமைக்கு ஒரு கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஒருவரே காரணமாகும். அவரே இந்நிறுவனத்தை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்தார்.
ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் தலைவராகவும் இருந்து கொண்டு பெருந்தொகையான நிதியை பெற்றுக்கொண்டு, அந்த மக்களிற்கு நஞ்சூட்டியதுக்கு ஒப்பான செயலை செய்துள்ளார். இந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற மாவை சேனாதிராஜா நாடாளுமன்றத்திலும் கதைக்கவில்லை. வெளியேயும் கதைக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அருவருடிகளாக மாறிவிட்டார்கள். அரசியல் தீர்வு விடயமாக இருந்தாலும் சரி, அபிவிருத்தி விடயங்களாக இருந்தாலும் சரி அவர்கள் அரசாங்கத்தின் கைக்கூலிகளாகவே மாறிவிட்டார்கள்.
கடந்த வரவு செலவு திட்டத்துக்கு வாக்களிக்க முடியாது என, என்னோடு சேர்ந்து 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள்.
இதிலும் சிறீதரன், ஒரு படி மேல் சென்று, என்னை கட்சியை விட்டு நீக்கினாலும் பரவாயில்லை, வாக்களிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார். ஆனாலும் சம்மந்தரும், சுமந்திரனும் வாக்களிக்க வேண்டும் என்றே தெரிவித்திருந்தார்கள்.
எனினும் 8 பேர் வாக்களிக்க முடியாது என கூறியதால், அவர்கள் இருவரும் பிரதமரிடம் சென்று தங்களில் எட்டு பேர் அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களிக்க மாட்டார்கள் என கூறினர். அதற்கு பிரதமர், ‘அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இரண்டு கோடி ரூபாய் வீதம் ஒதுக்குகின்றேன், அதனை நீங்கள் மாவட்ட அபிவிருத்திக்கு பயன்படுத்துங்கள் என்றும், தேர்தல் ஒன்று வர இருப்பதனால், உங்களுக்கு அது உதவியாக இருக்கும்’ என தெரிவித்தார். ஆகவே இந்த நிதியானது, வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவு அளிக்கவே வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago