2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஆயுதங்கள் மீட்பு: ஐவரிடம் தொடர்ந்தும் விசாரணை

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா, புதூர் பகுதியில், ஆயுதங்களை, நபரொருவர் வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் உட்பட ஐவரை, தமது கட்டுப்பாட்டில் எடுத்து தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

டிசெம்பர் 2ஆம் திகதியன்று, புதூர் பகுதியில், நபரொருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுவதாக, புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த நபரரை கைதுசெய்வதற்கு முயன்றுள்ளனர்.

இதன்போது, கறித்த நபர், தான் வைத்திருந்த பையை வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று, தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், குறித்த பையை பொலிஸார் சோதனை செய்தபோது, அதனுள் கைத்துப்பாக்கி, அதற்குரிய ரவைகள், கைக்குண்டுகள் நான்கு, ஸ்மாட் அலைபேசிகள் 2, அதற்குரிய மின்கலத்துடனான மின் வழங்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதையடுத்து, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பெண் உட்பட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .