2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை

Niroshini   / 2017 மார்ச் 29 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து  7ஆவது  நாளாகவும் இன்று முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

குறித்த மக்களை நேற்று மாலை நேரில் சென்று சந்தித்த மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை, கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள மக்களின் காணியை நேரடியாக சென்று பார்வையிட்டார்.

இதன் போது கடற்படை முகாமுக்குள் சென்று மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வந்தனைக்கூறிய ஆயர் ஜோசப் சிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை உட்பட அருட்தந்தையர்கள் அடங்கிய குழுவினரை புகைப்படம் எடுத்த மன்னார் பிராந்தி ஊடகயியலாளர் ஒருவரின் புகைப்பட கருவியில் இருந்த புகைப்படங்களை கடற்படையினர் பலவந்தமாக புகைப்பட கருவியை அபகரித்து குறித்த கருவியில் உள்ள புகைப்படங்களை அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .