2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2017 ஜனவரி 16 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பதில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமையை எதிர்த்தும், குறித்த பாடசாலையில் தற்போது கடமையில் உள்ள அதிபரையும் இடமாற்றம் செய்ய எடுக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பாடசாலையின் பிரதான வாயிலை மூடியே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த பாடசாலையில் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சுமத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .