2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆற்றில் மிதக்கும் மீன்கள்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு – வட்டுவாகல் ஆற்றில், பெருந்தொகையான மீன்கள் உயிரிழந்துள்ளன.

வடக்கு மாகாணத்தில், தொடர்ந்து நிலவும் வரட்சியுடனான வானிலை காரணமாக, நீர் வெப்பமடைந்து, இந்த ஆற்றில் இருந்த மீன்கள் உயிரிழந்திருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த ஆற்றுப்பகுதியில், நீர் வற்றி காணப்படுவதுடன், மீன்கள் கொத்து கொத்தாக மடிந்து கரையொதுங்கிருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

மேலும், மீன்கள் இறந்து கிடப்பதால், துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியில் செல்வோர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X