Editorial / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, அக்கராயன் ஆற்றைத் துப்புரவு செய்து தருமாறு இக்குளத்தின் கீழான விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய குளமாகிய இக்குளத்தில் இருந்து மழை காலத்தில் குளம் நிரம்பி வழிகின்றபோது குறித்த ஆறு வழியாக வெள்ளம் கடலைச் சென்றடைகின்றது.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அக்கராயன் ஆறு துப்பரவு செய்யப்படாததன் காரணமாக, குளத்தில் இருந்து வெளியேறும் நீர் நெற்செய்கை நிலங்களுக்கு ஆண்டுதோறும் பரவுகிறது.
இந்நிலையில், ஆறின் குறுக்கே வீழ்ந்துள்ள மரங்களை அகற்றி ஆற்றைத் துப்புரவு செய்வதன் மூலம் அக்கராயன் குளத்தின் கீழான நெற்செய்கை நிலங்களுக்கு வெள்ளம் பரவாத நிலைமை காணப்படும்.
எனவே, அக்கராயன் குளத்தில் இருந்து குடமுருட்டிக் குளம் வரையான ஏழு கிலோமீற்றர் வரையான தூரம் ஆறு துப்புரவு செய்யப்பட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago