2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஆலய உற்சவத்தில் இளைஞன் பரிதாபமாக பலி

Freelancer   / 2023 ஏப்ரல் 29 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா - எல்லப்பர், மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த ஆலயத்தில் இரவு இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினை குறித்த இளைஞன் எடுத்துள்ளார்.

இதன் போது வயரியில் மின்சார ஒழுக்கு காணப்பட்ட இடத்தில் இளைஞரின் கைப்பட்டமையினையடுத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலிலேயே இளைஞர் மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்தில் 29 வயது மதிக்கத்தக்க நா.கபிலன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .