Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 28 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - அக்கராயன் ஆற்றுப்படுகையில், பொது அமைப்புகளின் ஆலோசனைகளைப் பெற்று மணல் அகழ்வுக்கான அனுமதிகளை வழங்க வேண்டுமென, நாகதம்பிரான் கமக்கார அமைப்பின் தலைவர் சி.கனகசபாபதி தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த பத்தாண்டுகளில், அக்கராயன் ஆற்றுப்பகுதியில் தொடர்கின்ற மணல் அகழ்வால், குளத்தின் கீழான நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், கிணறுகளின் நீர் மட்டமும் அடிநிலையைச் சென்றடைந்துள்ளன என்றார்.
மேலும், பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளனவெனவும், அவர் கூறினார்.
“விவசாய அமைப்புகளின் அனுமதிகளின்றி 3க்கும் மேற்பட்டவர்களுக்கு மணல் அகழ்வுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக, குளத்தின் கீழான நெற்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன” எனவும், கனகசபாபதி தெரிவித்தார்.
54 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
56 minute ago
1 hours ago