2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

‘ஆளணி வெற்றிடத்தால் விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்’

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்திலும் அதன் கீழ் உள்ள 10 கமநல சேவை நிலையங்களிலும் காணப்படும் ஆளணி வெற்றிடம் காரணமாக, விவசாயிகளின் தேவைகளையும் சேவைகளையும் நிறைவேற்றுவதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாக, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் உட்பட இத்திணைக்களத்துக்கு உட்பட்ட 10 கமநல சேவை நிலையங்களிலும் அனைத்து தரங்களிலும் மொத்தம் 226 ஆளணி உத்தியோகத்தர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் தற்போது அனைத்து தரங்களையும் சேர்ந்த 67 உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர்.

மிகுதியாக இருக்கும் 159 ஆளணி உத்தியோகத்தர் பதவிகள் வெற்றிடமாக இருப்பதால், முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளின் தேவைகளையும் சேவைகளையும் நிறைவேற்றுவதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாக, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆளணி விவரங்களுக்கு அமைய இருக்க வேண்டிய உத்தியோகத்தர்கள் எண்ணிக்கையானது, இத்திணைக்களத்துக்கு உட்பட்ட 127 கிராமங்களிலும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் ஆளணிக்கு 127 உத்தியோகத்தர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் தற்போது 06 உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர். மிகுதியாக இருக்கும் 121 ஆளணி பதவிகளும் வெற்றிடமாகவே உள்ளது.

இதேவேளை, 10 கமநல சேவை நிலையங்களின் கீழும் 10 கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில், 03 பேர் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர். மிகுதியாக இருக்கும் இடங்களிலும் 07 பதில் கடமை உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதவியில் 48 நிரந்தர உத்தியோகத்தர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் தற்போது 35 பேர் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர். தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் பதவியில் 03 பேர் கடமையாற்ற வேண்டிய நிலையில் தற்போது ஒருவர் மட்டுமே கடமையாற்றி வருகின்றார்.

முகாமைத்துவ உதவியாளர் பணியிடங்களில் 12 பேர் கடமையாற்ற வேண்டிய நிலையில் தற்போது 04 பேர் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர். கமநல சேவை நிலை எழுதினர் பதவியில் 20 பேர் கடமையாற்றி வருகின்றனர். சாரதிகள் பதவியில் 03 பேர் கடமையாற்ற வேண்டிய இடத்தில் தற்போது ஒருவர் மட்டுமே கடமையாற்றி வருகின்றார்.

அலுவலக உதவியாளர் பணியிடங்களில் 03 தேவையான இடத்தில் தற்போது ஒருவர் மட்டுமே கடமையாற்றி வருகின்றார். தொழிலாளர்கள் ஆளணி வெற்றிடங்கள் அனைத்தும்
நிரப்பப்பட்டுள்ளதாக, பணிமனை சுட்டிக்காட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .