2025 மே 19, திங்கட்கிழமை

‘ஆழ்துளை கிணறுகளை அமைப்பதற்கு அனுமதி பெற வேண்டும்’

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில், ஆழ்துளை (குழாய்) கிணறுகளை அமைப்பதற்கு, துறைசார் திணைக்களங்களின் அனுமதிகள் பெறப்பட வேண்டுமென, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ. வேழமாலிகிதன் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில், நிலக் கீழ் நீரைப் பாதிக்கும் வகையில் அதிகளவான குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளனவெனவும் இதனால், கடந்தாண்டுகளில் தொடர்ச்சியாக வரட்சி நிலவியதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, வயல் நிலங்களில் சுமார் 150 அடி ஆழத்ததுக்கும் குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு, நெற்செய்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அவர், இதேவேளை குறிப்பிட்ட சில பிரதேசங்களிலும் 270 அடி ஆழத்துக்கும் குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளனவெனவும் சாடினார்.

இவ்வாறான குழாய்க் கிணறுகள் எந்தவித அனுமதிகளும் இன்றியே அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, எதிர்காலத்தில் இப்பகுதிகளில் குழாய்க் கிணறுகளை அமைப்பதாக இருந்தால், துறைசார்திணைக்களங்களின் அனுமதிகள் பெறப்படவேண்டுமெனத் தெரிவித்த அவர், குழாய்க் கிணறுகளை அமைக்கின்ற இயந்திரங்கள் பிரதேச சபையின் பதிவுக்குட்படுத்தப்பட வேண்டுமென்றும் கூறினார்.

அத்துடன், ஏற்கெனவே அனுமதிகள் பெறப்படாது அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட குழாய்க் கிணறுகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X