2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஆழ்துளைக்கிணறுகளால் விவசாய கிணறுகளில் நீட்மட்டம் குறைவடைகின்றது

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு பிரதேசத்தில் ஆழ்துளைக்கிணறு அமைத்து அளவுக்கதிகமாக நீர் உறிஞ்சப்படுவதால் விவசாயக்கிணறுகளில் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்து வருவதாகவும் இதனால் எதிர்காலத்தில் தமது விவசாயச் செய்கைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி ஒலுமடு கிராமத்தில் வாழும் மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

வருடம் முழுவதும் பயிர்செய்யக்கூடிய தமது நிலங்களில் தற்போது பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, இந்தப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து அளவுக்கதிகமான நீர் பெறப்படுவதனால் ஏனைய கிணறுகளின் நீர்மட்டம் மிக வேகமாக குறைவடைந்துள்ளது.

அண்மைய நாட்களாக இந்தப்பிரதேசங்களில் காணப்பட்ட கிணறுகள் முழுமையாக நீர்வற்றியுள்ளதால் இந்தப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயக்செய்கையை பாதுகாப்பதுக்காக மேலும் கிணறுகளை ஆழப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .