Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
கிளிநொச்சி – வள்ளிபுனம் பகுதியில், இன்று (06) காலை, இடைக்கட்டு குளத்தில் மூழ்கி, உருத்திரபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் பாணுசன் என்ற 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை விடுமுறை காரணமாக, வள்ளிபுனத்தில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற இந்தச் சிறுவன், இன்றுக் காலை, அப்பகுதியில் உள்ள ஏனைய சிறுவர்களுடன், இடைக்கட்டு பகுதிக்குச் சென்று நாவல் பழம் பறித்து சாப்பிட்டுவிட்டு, இடைக்கட்டு குளத்தில் குளிக்கச் சென்றுள்ளார்.
சிறுவன் குளித்துக்கொண்டிருந்த போதே, நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்களால் காப்பாற்றப்பட்ட சிறுவன், மூங்கிலாறு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025