Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 பெப்ரவரி 06 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பல கட்சிகள், தமிழ் தேசியக்கூட்டமைப்பு இடைக்கால அறிக்கையை ஒரு தீர்வாக ஏற்றுக்கொண்டு விட்டது என போலியாக பிரசாரம் செய்கின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளர்.
கிளிநொச்சி பளை பகுதியில் நேற்று (05) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாங்கள், அமைச்சுப்பதவிகளை வகிக்கவில்லை. நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற அவர்களது உரிமைகள் பற்றிப்பேசுகின்ற ஒரு எதிர்க்கட்சியாகவே இருக்கின்றோம். அரசாங்கத்திடம் எமது மக்களின் உரிமைகளுக்காக 60 தடவைகளுக்கு மேல் பேசியிருக்கின்;றோம்.
இப்போது தேர்தலில் போட்டியிடுகின்;ற பல கட்சிகள், தமிழ் தேசியக்கூட்டமைப்பு இடைக்கால அறிக்கையை ஒரு தீர்வாக ஏற்றுக்கொண்;டு விட்டது என்று போலியாக பரப்புரை செய்கின்றனர்.
இடைக்கால அறிக்கையை ஒரு தீர்வாகக் கூட இன்னும் கொண்டு வரவில்லை. அதில் உள்ள விடயங்களைப் பேசுகின்றோம். அது முன்னேற்றம் காணப்பட்டு, அதில் உள்ள விடயங்கள் தொடர்பில் இறுதி அறிக்கை மக்களிடம் பேசப்பட்டு, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் பின்னர் மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்.
இதையெல்லாம் விடுத்து, தமிழ் தேசியக்கூட்டமைப்பு இடைக்;கால அறிக்கையை ஒரு தீர்வாக ஏற்று விட்டதென்று போலிப்பிரசாரம் செய்கின்றனர்.
நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற ஒரு அமைப்பு. இதிலிருந்து நாங்கள் விலகிப்போகமாட்;டோம்.
இன்றும் தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்;படவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
காணாமலாக்கப்;பட்டவர்கள் தொடர்பில் இன்னமும் அரசாங்கம் உரிய பதிலை வழங்கவில்லை” என தெரிவித்தார்.
27 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago
4 hours ago