Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீப்
எல்லை தாண்டி வந்த இந்தியப் படகுகளை அரசுடமையாக்குமாறு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்யுமாறு, படகு உரிமையாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை, ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று (04) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்த ஜூன் மாதம் நெடுந்தீவு பகுதியில் கைதுசெய்யப்பட்ட குறித்த 3 இந்திய இழுவைப்படகுகளையும், புதிய கடல்வள பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசுடமையாக்குமாறு, கடந்த மாதம் 28ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து வருகை தந்த குறித்த படகுகளின் உரிமையாளர்கள் மேற்படி தீர்ப்பை இரத்து செய்து மறுபரிசீலணை செய்யுமாறு கோரி, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை நேற்று (04) ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், இதன்போது, உரிமையாளருக்கான தவணை, தேவைக்கு அதிகமாகவே நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்தும் உரிய கால எல்லைக்குள் யாரும் உரிமை கோராதபடியால், மேற்படி படகு அரசுடமையாக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, நீதவான் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
14 minute ago
20 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
30 minute ago