Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2022 ஜனவரி 05 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், டிசெம்பர் 19ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும், மன்னார் நீதிமன்றத்தில் இன்று (05) ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இன்றைய வழக்கு விசாரணை தொடர்பில், சட்டத்தரணி எஸ்.டிணேசன் தெரிவிக்கையில்,,,
இந்திய மீனவர்கள் 12 பேரும், இன்றைய தினம் புதன்கிழமை (5) மன்னார் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களில் சிறுவர் ஒருவரும் அடங்குகின்றார்.
அந்த மீனவர்களுக்கு எதிராக 3 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு கடற்தொழில் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மீனவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் ஒரு வருட சாதாரண சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு, அச்சிறை தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மீனவர்களில் சிறுவர் ஒருவரும் இருந்தமையால், நிபந்தனையின் அடிப்படையில் எச்சரிக்கப்பட்டு, சிறுவன் தனது கல்வியை தொடர வேண்டும் என நீதவான் அறிவுறுத்தியதோடு மீனவர்களையும் விடுவித்தார்.
அதன்பின்னர், மீனவர்கள் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago
2 hours ago