Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Niroshini / 2021 ஜூன் 20 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
தமிழ் மக்கள் கௌரவமான அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கு, இந்தியா முன்வர வேண்டுமென, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 31ஆவது தியாகிகள் தினம், வவுனியாவில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று (19) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தியிருந்தால், பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள், சொத்தழிவுகளைத் தடுத்திருக்கலாமென்றார்.
மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள், 13ஆவது அரசியல் யாப்பில் உள்ளபடி மாகாண சபைக்குள்ள அதிகாரங்களை வழங்குவதற்கு பதிலாக, வடக்கு - கிழக்கு ஆகிய மாகாணங்களை இரண்டாக பிரித்து மட்டுமன்றி, இன்று கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களை மாகாண அரசாங்கத்திடம் இருந்து பறித்தெடுப்பதிலே குறியாக செயற்பட்டு வருகின்றார்கள் என்றும், அவர் சாடினார்.
யுத்தம் முடிந்து 12 வருடங்கள் கடந்தும், இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாண சபைக்குரிய முழுமையான அதிகாரங்களை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா இன்னமும் முன்வரவில்லை எனத் தெரிவித்த சிவசக்தி ஆனந்தன், எனவே, தமிழ் மக்கள் கௌரவமான அரசியல் தீர்வொன்றைப் பெறுவதற்கு, இனியாவது தமக்கு இந்தியா உதவ முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago