2025 மே 09, வெள்ளிக்கிழமை

’இந்தியாவுக்கு பாதகமாக செயற்படமாட்டேன்’

Niroshini   / 2021 ஜூலை 22 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நாட்டை விற்கவோ அல்லது அண்டை நாடான இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ தான் ஒருபோதும் செயற்படமாட்டேனென்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று (22) நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில்  கலந்துகொண்டதன் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சீன நிறுவனத்தின் முதலீடுகளையும் தொழில்நுட்பத்தையும் பெற்று,  தமது மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் கௌதாரிதுனையில் கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ளதென்றார்.

சீனாவின் தொழில்நுட்ப அறிவைப் பெற்று,  போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கமாகுமெனவும், அவர் கூறினார்.

இதேவேளை, இக்கலந்துரையாலின் போது, கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான மணல் அகழ்வுகள், வீதி அபிவிருத்தி, கௌதாரிமுனையில் காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுப தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது எனவும், டக்ளஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X