Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன்
தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான ஒரு அங்கமே கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைக்கப்படும் பௌத்த விகாரை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயச் சூழலில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையைப் நேற்று வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 'தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் பௌத்த மயமாக்கும் நோக்கத்துடனேயே இராணுவத்தின் துணையுடன் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன
ஒரு வீதம் கூட பௌத்தர்கள் இல்லாத தமிழர்களை மாத்திரம் கொண்ட பகுதியில் இப்படியான பிரமாண்டமான பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. இதே நடவடிக்கைகள் தொடருமாயின் சில காலத்தில் தமிழர்களது கலாசாரம் அழிக்கப்பட்டு, தமிழர்கள் என்றொரு இனம் இங்கு வாழ்ந்துள்ளதா என்ற நிலைதான் ஏற்படும்' என்றார்.
'சாதாரண மக்கள் மதில் ஒன்றை அல்லது வீடொன்றைக் அனுமதி இன்றி கட்டினால் சட்டத்தின் படி அபராதம் அறவிடுகின்ற பிரதேசசபை இவ் நடவடிக்கைக்கு என்ன முடிவு எடுத்துள்ளத என என எழுத்துமூலம் கேட்டுள்ளேன்' என்றார்.
கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயச் சூழலை சட்டவிரோதமாக அபகரித்துள்ள இராணுவம், தமிழர்களின் தாயகத்தை சிங்களமயமாக்கும் நோக்கிலேயே இராணுவப் பின்னணியில் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் அமைக்கப்படுவதாக அப்பகுதியில் மக்கள் எதிர்பினையும் மீறி பௌத்த விகாரையை அமைத்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், மத்திய செயற்குழு உறுப்பினர் க.ஜெயக்குமார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா ஆகியோர் குறித்த விகாரை அமைக்கப்படும் பகுதிக்கு நேற்று சென்று பார்வையிட்டனர்.
விகாரைப் பகுதியை சூழவும் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரும் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதன் காரணமாக முட்கம்பி வேலிக்கு அப்பால் நின்றே விகாரை அமைக்கப்படுவதை சிறீதரன் உள்ளிட்ட குழுவினரால் பார்வையிட முடிந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
8 hours ago