2025 ஜூலை 05, சனிக்கிழமை

இராணுவ வாகனம் மோதி விபத்து: மூவர் படுகாயம்

George   / 2016 ஜூலை 06 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கைவேலிப்பகுதியில் இராணுவ வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த விபத்து செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பில் வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர்களை பின்னால் வேகமாக சென்ற இராணுவ பிக்கப் ரக வாகனமொன்று மோதித் தள்ளி 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச்சென்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மூவர், புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குமாரசாமிபுரம், விசுவமடுவைச் சேர்ந்த கஜேந்திரன் (வயது 23), கைவேலியை சேர்ந்த மோகன் (வயது 21), வெற்றிவேல் பெருமாள் (வயது 35) ஆகியோர் காயமடைந்துள்ளனர். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .