Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Princiya Dixci / 2016 மே 28 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
இடம்பெயர்ந்து மீண்டும் தமது பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள், பல இன்னல்கள் தொல்லைகளை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு முகங்கொடுப்பதாகவும் குறிப்பாக பெண்கள் வாய்விட்டுச் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவிப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் குறிப்பிட்டார்.
இறுதி யுத்தம் நடைபெற்ற 2009ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் 2014ஆம் ஆண்டு கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டனர்.
இராணுவத்தினர் திட்டமிட்டு அவர்களின் பாரம்பரிய காணிகளை அபகரித்து தமக்குத் தேவையான கட்டடங்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் மாதிரிக் கிராமத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பரிதாபத்துக்குரியதாகக் காணப்படுகின்றது.
கலை கலாசாரம் திட்டமிட்டு அழிக்கப்படும் நிலையில், பெண்களின் மரபுவழிப் பண்பாடுகள் விழுமியங்களை படையினர் மலினப்படுத்துவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். கேப்பாப்புலவில் சுமார் 320 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட போதும், யுத்தம் காரணமாக பலரிடம் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் இல்லை. இதனால் இராணுவத்தினர் அந்தக் காணிகளை அபகரிப்பதுடன், அந்த காணி மக்களுக்கு உரியதல்ல என்றும் எச்சரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.
தமது பாரம்பரிய காணிகளை மீட்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் பல குடும்பங்கள் வழக்குத் தாக்கல் செய்த நிலையிலும் கூட இராணுவத்தினர் காணி அபகரிக்கும் நடவடிக்கைகளை கைவிடவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago