2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்தின் மறுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதிவழிப் போராட்டம்

Gavitha   / 2016 ஜூலை 03 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி பூநகரியின் இரணைதீவுக்கு, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் செல்வதற்குக் கடற்படை அனுமதி மறுத்துள்ளதையடுத்து, இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்து முழங்காவில் இரணைமாதா நகரில் தங்கியுள்ள மக்கள், அமைதி வழிப் போராட்டமொன்றினை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

1990ஆம் ஆண்டு போர் உச்சமடைந்த காலத்தில் இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் முழங்காவில் இரணைமாதா நகரில் தங்கியுள்ளனர். போர் நிறைவுக்கு, வந்து 2009இல் மீள்குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து தமது பூர்வீகநிலமான இரணைதீவுக்குச் செல்லவேண்டும் என பூநகரி பிரதேச செயலகத்திலும் மாவட்டச் செயலகத்திலும் நடைபெற்ற கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் குரல் எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்;தில் இரணைதீவு மக்கள், கடந்த 26ஆம் திகதி இரணைதீவுக்கு படகுகளில் செல்வதென முடிவெடுக்கப்பட்டது.

இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், அங்கயன் இராமநாதன்,  வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் பூநகரிப் பிரதேச செயலாளர் ஆகியோர் முன்னிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .