2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இரட்டைவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள்

Freelancer   / 2021 டிசெம்பர் 11 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - இரட்டைவாய்க்கால் பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட குண்டுகள் சில முல்லைத்தீவு பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளன.

விமானப்படையினரின் தகவலுக்கு அமைய இரட்டைவாய்க்கால் பகுதியில் பொதுக்காணி ஒன்றில் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன் போது ரி82 வகை குண்டுகள் மூன்றும்,ஜே.ஆர் வகை குண்டு ஒன்றும்,தமிழன் குண்டு ஒன்றும், 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த குண்டுகளை சிறப்பு அதிரடிப்படையினரிடம் கொடுத்து செயலிழக்கம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் பணித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X