Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் இரண்டாவது தடவையாகவும் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணுக்கு 02 மாத காலங்கள் சிறைத்தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, நேற்றுத் திங்கட்கிழமை (08) உத்தரவிட்டார்.
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் 1,100 மில்லிகிராம் கஞ்சாவினை உடமையில் வைத்;திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரைப் பொலிஸார் கைதுசெய்தனர்.
இந்தப் பெண் ஏற்கெனவே கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போதும் மீளவும் அதே குற்றத்தில் ஈடுபட்டதை கவனத்தில் கொண்ட மன்று, பெண்ணுக்குச் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தது.
இதேவேளை, 950 மில்லிகிராம் கஞ்சா வைத்;திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 நாட்கள் சமுதாயம் சார் சீர்திருத்த பணியில் ஈடுபடவும் நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago