2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இரணைதீவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடற்றொழில் முறைகளில் தங்கியுள்ளது

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, இரணைதீவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம், கடற்றொழில் முறைகளில் தங்கியுள்ளது என்றும் தங்களது பூர்வீக நிலமான இரணைதீவில் மீள்குடியேற்றுகின்ற போது, தங்களுடைய வாழ்வாதாரம் முன்னேற்றமடையும் என, பூநகரி கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர் பிரான்சிஸ் ஜோசப் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி-பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு கடற்றொழில் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள், கடந்தகால யுத்தம் காரணமாக, கடந்த 1990ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதும், யுத்தம் நிறைவு பெற்றும் இதுவரை அவர்கள் தமது சொந்த நிலத்தில் சென்று வாழ்வதற்கும் தொழில்களை மேற்கொள்வதற்குமான அனுமதிகள் வழங்கப்படவில்லை.

இதனால், தமது வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தம்மை தமது சொந்த நிலத்தில் மீள்குடியேற்ற அனுமதிக்குமாறு, இரணைதீவு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, தற்போது தங்களை குடியமர்த்தியுள்ள இரணைமாதா நகரில் இருந்து தொழில்களை தேடி நீண்ட கடல் மைல்கள் செல்ல வேண்டும் என்றும் தங்களை தமது சொந்த நிலத்தில் குடியேற்ற அனுமதிக்கும் போது அங்கு சென்று எல்லோருமே தொழில் செய்யும் வாய்ப்பு உள்ளது.

எனவே, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொழில்முறைகளில் தங்கியுள்ளன என்றும் தங்களை பூர்வீக நிலத்தில் மீள்குடியேற்றும்போது மீனவர்களின் வாழ்வாதாரம் அதிகரிக்கும் எனவும் சமாச தலைவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .