2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இரணைமடுக்குளத்தில் 26 அடி மட்டமுள்ள நீரையே தேக்க முடியும்

Kogilavani   / 2015 நவம்பர் 02 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் கீழ் பகுதியில் புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதால் 26 அடி மட்டமுள்ள நீரையே குளத்தில் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.  

சுமார் 21,985 ஏக்கருக்கும் அதிகளவான நிரப்பரப்பில் 6,495இற்கு மேற்பட்ட விவசாயிகள் பயிர்செய்கை மேற்கொண்டு வரும் இரணைமடுக்குளம்மானது,  கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுவதுடன் இதன் கீழான கட்டுமானங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன.

இந்நிலையில் குளத்தின் கீழான நீர்ப்பாசன வாய்க்கால்கள், கழிவு வாய்க்கால்கள் இபாட் திட்டத்தின் கீழ் 2,400 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்;பட்டு வருகின்றன.

இரணைமடுக்குளத்தின்; புனரமைப்பு பணிகள் தற்போது 2,200 மில்லியன் ரூபாய் செலவில் 5 திட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு குளத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்;படுவதனால் காலபோக செய்கைக்கான நீர் விநியோகம் பாதிக்கப்படலாம் என விவசாயிகள் பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,

கடந்த ஆண்டுகளில் 31 அடி வரை குளத்தின் நீர் மட்டம் பேணப்பட்டது. இவ்வாண்டு இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் 26 அடி வரையான நீரை சேமிப்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேலதிகமான நீரை எந்தவித பாதிப்;;புக்களையும் ஏற்படுத்தாதவாறு வெளியேற்றுவதற்;கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குளத்தின் புனரமைப்பு பணிகளின் போது காலபோக செய்;;கையையோ அல்லது மேலதிக நீரை வெளியேற்றும் போதோ எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது' என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .