Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 19 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக மனித உரிமைfs; ஆணைக்குழு நடவடிக்கை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குநர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.
இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, இரணைதீவு மக்கள் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இரணைதீவு மக்களின் வாழ்வியல் பிரச்சினை தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் சி.கனகராஜ் தலைமையில் மனித உரிமை ஆணைக்குழுவினர் கடந்த மாதம் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இரணைதீவுக்கு சென்றனர்.
குறித்த விஜயத்தின் போது, இரணைதீவு மக்களுடன் இதுவரை மீள்குடியேற்றத்தின் பின்னர் பூர்த்தியாக்கப்பட்ட, பூர்த்தியாக்கப்படாத விடயங்கள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடியுள்ளனர்.
இந்த நிலையில், இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக மக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை, மே மாதம் 3 ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், கிராம சேவையாளரின் சேவைகள்,பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள், சமுர்த்தி கொடுப்பனவுகள் வாழ்விடம், நீர் தேவைப்பாடு, போக்குவரத்து, தபால் சேவை, மின்சாரம், சுகாதர திணைக்களத்தின் செயற்பாடு, வைத்தியத் துறை, மத வழிபாடுகள் தொடர்பாக மக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையை, மே மாதம் 3 ஆம் திகதிக்கு முன்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குநர் ஜாட்சன் பிகிராடோ மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago