Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூன் 28 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன், சுப்ரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, இரணைதீவு பகுதியை விடுவிப்பது தொடர்பில், ஜனாதிபதியுடன் பேசி இருவார காலத்துக்குள் உரிய பதிலை வழங்குவதாக, பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன, உறுதியளித்தார்.
இரணைதீவை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று, இரணைமாதா நகர்ப் பகுதியில், நேற்றுப் புதன்கிழமை (28) இடம்பெற்றது.
இதில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறிதரன், கடற்படை அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சத்தியசீலன், பூநகரி பிரதேசச் செயலாளர் மற்றும் இரணைதீவு மக்கள் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி, பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மிகவும் அதிக கடல்வளம் கொண்ட இரணைதீவுப் பகுதியில் இருந்து, கடந்த 1992ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்கள், தமது சொந்த நிலத்தில் தங்களை மீள்குடியேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், முழங்காவில் - இரணைமாதா நகரில் கடந்த மே மாதம் முதலாம் திகதி ஆரம்பித்த இந்தத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம், 59 நாட்களாகத் தொடர்கிறது.
இதேவேளை, கடந்த 23ஆம் திகதியன்று, ஏ-32 பூநகரி - மன்னார் வீதியை மறித்து, வீதிமறியல் போராட்டத்தையும் அம்மக்கள் முன்னெடுத்தனர்.
இந்நிலையிலேயே, கிளிநொச்சிக்கான விஜயமொன்றை நேற்று மேற்கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, “தமது பூர்வீக இடமான இரணைதீவை தம்மிடம் கையளிக்க வேண்டும்” என, அம்மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து பதிலளித்த அமைச்சர் ருவன் விஜயவர்தன, “குறித்த பகுதியை விடுவிப்பது தொடர்பிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும், இரண்டு வார காலத்துக்குள் ஜனாதிபதியுடன் பேசி மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, உறுதியளித்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago