2025 மே 10, சனிக்கிழமை

இரணைத்தீவு மக்களுக்கு மலேரியா பரிசோதனை

Niroshini   / 2021 ஜூன் 27 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்களுக்கு, அண்மையில், மலேரியா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மலேரியா தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியும் மாட்ட உளநல மருத்துவ அதிகாரியுமான மா. ஜெயராஜா தலைமையிலான மருத்துவக் குழுவினர், இரணைத்தீவுக்குச் சென்று, அங்கு வசிக்கின்றவர்களின இரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்காக பெற்றுள்ளனர்

இலங்கை - இந்தியாவுக்கு இடைப்பட்ட கடலில், இரணைத்தீவு தனித்தீவாக இருப்பதால், இந்தியாவில் தற்போதும் தாக்கத்தை செலுத்துகின்ற மலேரியா, சில வேளைகளில், இரணைத்தீவுக்கும் பரவியிருக்கலாமென்ற சந்தேகத்தின் அடிப்படையில். இந்தப்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இரணைத்தீவில் குடியேறி வசித்து வருகின்ற மக்களுக்கு நுளம்பு வலைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X