2025 ஜூலை 05, சனிக்கிழமை

இரத்ததான நிகழ்வு

George   / 2016 ஜூலை 16 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை(16) காலை இரத்ததான நிகழ்வு இடம் பெற்றது. 

மன்னார்  பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அருட்தந்தை அலெக்ஸ் சான்டர் சில்வா தலைமையில் இடம்பெற்ற குறித்த இரத்ததான நிகழ்வில் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

பேசாலை பங்கின் உதவி பங்குத்தந்தை குறித்த இரத்ததான நிகழ்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .