Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முதலமைச்சர் கேட்டாலும் நான் அமைச்சுப் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்யத் தயார் இல்லை. முடிந்தால், முதலமைச்சரின் அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சுப் பொறுப்பிலிருந்து நீக்கட்டும்” என வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“வட மாகாண சபையின் அரசியல் சார்ந்த அசாதாரண சூழ்நிலைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாக, முதலமைச்சர் விசாரணைக் குழுவின் அறிக்கையின்படி செயற்படாமல் விட்டமையே முதன்மையான காரணமாக உள்ளது.
முதலமைச்சர், அமைச்சரவையை மாற்ற வேண்டும் என்று சொன்னால், விசாரணைக் குழுவை நியமிப்பதற்கு முன்னரே அவருக்கு இருக்கின்ற அதிகாரத்தை வைத்து அமைச்சர்களை மாற்றுவதற்கான அதிகாரம் இருக்கின்றது.
ஆனால், நியாயபூர்வமாக செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில், முதலமைச்சர் விசாரணக்குழுவை வைத்து, அதன்பின்னர் அறிக்க ஒன்று வந்ததன் பின்னரும் அதனை சரியாக அமுல்படுத்த தவறியமை உண்மையில் வேதனைக்குரிய விடையமாகும்.
இந்நிலையில், ஏனைய அமைச்சர்கள் தமது அமைச்சுப் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ளபோதும், முதலமைச்சர், என்னிடத்தில் இராஜினாமா செய்யுமாறு கேட்கவில்லை.
அவ்வாறு கேட்டாலும் நான் இராஜினாமா செய்யவதற்கு தயார் இல்லை. ஏன் என்று சொன்னால், இதுவரையிலும் எனது நிலைப்பாடு ஊழல் செய்யவில்லை என்பது .அது தொடர்பில் சரியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தோம்.
சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது நியதி. அந்த அடிப்படையில் இன்று வரை என்னைப்பொருத்த மட்டில் எனது நிலைப்பாடு சரியாக இருக்கின்றது.முதலமைச்சர் வேண்டும் என்று சொன்னால் தனது அதிகாரத்தை பயண்படுத்தி என்னை அமைச்சுப்பொறுப்பில் இருந்து நீக்க முடியும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .